Colombo (News 1st) கொள்ளுப்பிட்டியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதமடையலாம் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே. இதிபொலகே தெரிவித்துள்ளார்.
கரையோர மார்க்கத்தின் ஏனைய ரயில் சேவைகள் தாமதமாக முன்னெடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
மஹவயிலிருந்து மொறட்டுவை நோக்கி பயணித்த அலுவலக ரயிலொன்றே இன்று(27) காலை தடம் புரண்டது.
இதனால் கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில்களுக்கு பாதிப்பு ஏற்படாதெனவும் கொழும்பிலிருந்து வௌியேறும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் என். ஜே. இதிபொலகே மேலும் தெரிவித்துள்ளார்.