Colombo (News 1st) கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான திகதி தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை திகதிகளில் மாற்றம் மேற்கொள்ள நேரிடும் என இதற்கு முன்னர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.