ஒரு தொகை கொக்கெய்னுடன் கென்ய பிரஜை கைது

300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கென்ய பிரஜை கைது

by Staff Writer 25-09-2023 | 2:02 PM

Colombo (News 1st) சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த குற்றச்சாட்டில் கென்ய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் டோகாவிலிருந்து நேற்று(24) இலங்கைக்கு வந்துள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர், சுங்கப் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

சந்தேகநபர் 03 பிஸ்கட் டின்களில் பொதி செய்யப்பட்ட 4 கிலோகிராம் கொக்கெய்னை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

34 வயதான சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருட்களுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.