LGBTQIA+ சமூகத்தினர் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுயமரியாதை நடைபவனி

by Bella Dalima 10-06-2023 | 6:41 PM

Colombo (News 1st)  LGBTQIA+ சமூகத்தினர் (பால் புதுமையினர்) மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுயமரியாதை நடைபவனி 

LGBTQIA+ சமூகத்தினர் ( lesbian, gay, bisexual, transgender, intersex, queer/questioning, asexual) மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சுயமரியாதை நடைபவனி ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.

ஜூன் மாதம் முழுவதும் LGBTQIA+ சமூகத்தினரின் சுயமரியாதை மாதமாக சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு, 'யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் - 2023' நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இன்று நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நடைபவனி யாழ்ப்பாணம்  பஸ் நிலையம் முன்பாக ஆரம்பமாகி, சத்திரச் சந்தியூடாகச் சென்று, பண்ணை வீதியூடாக பொது நூலகத்தை அடைந்து, வைத்தியசாலை வீதி ஊடாக ஆரிய குளத்திற்கு முன்பாக நிறைவு பெற்றது.

சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள் என்பதனை வலியுறுத்தியும், LGBTQIA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாகக் கருதி, அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனும் நோக்கிலும் இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.