Colombo (News 1st) ஜனாதிபதியின் பரிந்துரைக்கு ஏற்ப கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டிருந்த போதிலும் சுமார் ஆறு மாத காலமாக அந்த நியமனம் வழங்கப்படவில்லை.
அதற்கு பதிலாக ஆளுங்கட்சியினால் தற்காலிக தலைவர்கள் நியமிக்கப்பட்டு, கடந்த காலங்களில் பல விடயங்களுக்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது.
இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற பொது நிதிக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டு கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என முன்மொழிந்தார்.
குழுவின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு ஏகமனதாக அனுமதி வழங்கினர்.