Colombo (News 1st) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது கடன் மறுசீரமைப்பு தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கென்ஜி ஒகமுரா இன்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை சந்தித்துள்ளார்.
நாட்டில் நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.