கலாபூசணம் K. சந்திரசேகரன் காலமானார்

மக்கள் கலைஞர் கலாபூசணம் K. சந்திரசேகரன் காலமானார்

by Bella Dalima 29-04-2023 | 3:24 PM

Colombo (News 1st) மக்கள் கலைஞர் கலாபூசணம் K. சந்திரசேகரன் இன்று (29) காலமானார்.

தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார்.

1949 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி பிறந்த அன்னார் தனது 74 ஆவது வயதில் காலமானார்

கொழும்பு - தெமட்டகொடையை பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற அமரர் கலாபூசணம் K. சந்திரசேகரன், தெமட்டகொடை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.

அகில இலங்கை சமாதான நீதவானாகவும் கடமையாற்றிய அவர் கலைத்துறையில் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

கடந்த 10 மாதங்களாக தமிழ் நாட்டில் வசித்து வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.

அன்னாரது இறுதிக்கிரியைகளை காரைக்குடியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வானொலி, சினிமா, நாடகம் என இலங்கை தமிழ் கலைத்துறையில் பாரிய பங்காற்றிய மக்கள் கலைஞர் கலாபூசணம் K. சந்திரசேகரனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏனைய செய்திகள்