விவசாயிகளுக்காக 40Mn டொலர் நிதி வழங்கும் USAID

விவசாயிகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்குவதாக சமந்தா பவர் அறிவிப்பு

by Staff Writer 10-09-2022 | 5:40 PM

Colombo (News 1st) நாட்டின் விவசாயிகளின் தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இன்றைய தினம் ஜா எல சென்று அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

விவசாயத்தின் போது எதிர்கொள்ள நேரிட்ட பல்வேறு சவால்கள் தொடர்பில் விவசாயிகளிடம் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் கேட்டறிந்துகொண்டார். 

விவசாயிகள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகியிடம் இதன்போது எடுத்துரைத்தனர்.

எரிபொருள் நெருக்கடி, உரமின்மை காரணமாக தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக அவர்கள் கூறினர்.

இந்நிலையில், நாட்டின் விவசாயிகளின் தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் அறிவித்துள்ளார்.

சமந்தா பவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று முற்பகல் நாட்டிற்கு வருகை தந்தார்.