.webp)
Colombo (News 1st) பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை எவ்வித தாமதமும் இன்றி விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார்.
அனுராதபுரம் ஶ்ரீ மகாபோதி, ருவன்வெலிசாய உள்ளிட்ட மத வழிபாட்டுத்தலங்களுக்கு ஜனாதிபதி இன்று விஜயம் மேற்கொண்டிருந்தார்.
மகா சங்கத்தினரிடம் ஆசி பெற்ற ஜனாதிபதி, தேயிலை, இறப்பர், தெங்கு, கறுவா, சோளம் உள்ளிட்ட பயிர்ச்செய்கைகளுக்கான உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, இரசாயன பசளை வழங்கும் திட்டத்தின் கீழ், 2022/23 பெரும்போகத்திற்கான சோளச் செய்கையாளர்களை ஒன்லைனில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
பதிவுகளுக்கு www.agrarian.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள்.