மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்

by Staff Writer 17-06-2022 | 3:36 PM
Colombo (News 1st) நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 7 பேர் தனுஷ்கோடி முதலாவது தீடையை சென்றடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையிலிருந்து இதுவரை 83 பேர் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.