by Staff Writer 07-06-2022 | 6:22 AM
Colombo (News 1st) கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி மாத்தறை - கொழும்பு பிரதான வீதியின் நில்வளா கங்கையின் மகாநாம பாலத்தை மறித்து எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட போது, பொலிஸாருக்கு சொந்தமான முச்சக்கர வண்டிக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று(06) நபரொருவருக்கு மூன்றரை வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதற்கு மேலதிகமாக 6,000 ரூபா நஷ்டஈடு மற்றும் 50,000 ரூபா சேதத்திற்கான கட்டணமும் தண்டனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
30 வயதான மாத்தறையை பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.