by Staff Writer 31-05-2022 | 8:19 AM
Colombo (News 1st) உலக வங்கியிடமிருந்து கிடைத்த நன்கொடையிலிருந்து சமுர்த்தி பெறுபவர்களுக்காக நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஒரு குடும்பத்திற்கு 5,000 ரூபா தொடக்கம் 7,500 ரூபா வரையான நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.
அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.