Colombo (News 1st) ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ரொக்கின் (Chris Rock) கன்னத்தில் அறைந்தமைக்காக வில் ஸ்மித் (Will Smith) பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
தாம் தவறிழைத்து விட்டதாக வில் ஸ்மித் அறிக்கையொன்றினூடாக குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம்(28) இடம்பெற்ற 94 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், தமது மனைவியை (Jada Pinkett Smith) கேலி செய்த கிறிஸ் ரொக்கை வில் ஸ்மித் மேடையிலேயே வைத்து கன்னத்தில் அறைந்திருந்தார்.
இந்த சம்பவத்திற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது, தான் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டதாகவும், தனது இந்த செயலால் பெரும் சங்கடம் அடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“விழாவில் நகைச்சுவை என்பது இயல்பானது தான் என்றாலும், என்னுடைய மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்தது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. அன்பு நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. எனது இந்த செயலால் பெரும் சங்கடம் அடைந்திருக்கிறேன். எனது செயலுக்காக கிறிஸ் ராக்கிடமும், நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமும், நிகழ்ச்சியை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்தவர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்”
என்று அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.