by Staff Writer 12-02-2022 | 7:41 PM
Colombo (News 1st) பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அதன் அளவு முக்கியமல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
பல்வேறு துறைசார் தொழில் வல்லுநர்களை இன்று சந்தித்த போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
COVID தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதேவேளை, அபிவிருத்தியும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இரண்டு வருடங்களாக நாட்டை மூடி வைத்ததால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, தற்போது படிப்படியாக கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
எதிர்பார்க்கும் இலக்கை அடைவதற்கு தேவையான பலத்தை பெற்றுக்கொடுத்து, தேசிய வேலைத்திட்டத்தை வெற்றிகொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மாநாட்டில் கலந்துகொண்டிருந்த தொழில் வல்லுனர்கள் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆரம்பித்துள்ள விவசாயத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒத்துழைப்பை எவ்வேளையிலும் வழங்கத் தயார் எனவும் இதன்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியின் பயன்பாட்டின் அவசியம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள தொழில் வல்லுநர்கள், அதனை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு நிபந்தனையின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.