இலங்கைக்கான சீன தூதுவர் வட மாகாணத்திற்கு விஜயம்

இலங்கைக்கான சீன தூதுவர் நாளை (15) வட மாகாணத்திற்கு விஜயம்

by Bella Dalima 14-12-2021 | 7:06 PM
Colombo (News 1st) இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong வட மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தை நாளை (15) ஆரம்பிக்கவுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளிலும் சீன தூதுவர் பங்கேற்கவுள்ளார். இலங்கைக்கான சீன தூதுவரின் வட மாகாண பயணத்தை கொழும்பிலுள்ள சீன தூதரகம் நியூஸ்ஃபெஸ்டிற்கு உறுதிப்படுத்தியது. இந்த விஜயத்தின் ஒரு அங்கமாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சீன தூதுவர் நாளை பிற்பகல் சந்திக்கவுள்ளார். அத்துடன், யாழ். மாவட்ட மீனவர்களுக்கான தொழில் உபகரணங்கள் மற்றும் நிவாரணப்பொருட்களை வழங்கும் நிகழ்வுகளிலும் சீன தூதுவர் கலந்துகொள்ளவுள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களையும் நாளை மறுதினம் (16) இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் சந்தித்து மீன்பிடி உபகரணங்கள் மற்றும் நிவாரணப்பொதிகளை பகிர்ந்தளிக்கவுள்ளார்.