தடைப்பட்ட அரச இணையத்தளங்கள் வழமைக்கு திரும்பின

by Bella Dalima 14-09-2021 | 10:32 AM
Colombo (News 1st) நேற்றிரவு தடைப்பட்ட சில அரச இணையத்தளங்கள் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தரவு கட்டமைப்பை புதுப்பிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே சில இணையதளங்கள் தடைப்பட்டதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் தலைவர் ஓஷத சேனாநாயக்க கூறினார். Lanka Government Cloud (LGC) environment மெமரியிலேயே அந்த தடை ஏற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். ICTA நிறுவனத்தின் அதிகாரிகள் உடனடியாக நேற்றிரவே அதனை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகவும் இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் தலைவர் கூறினார். COVID நிலைமை காரணமாக இலங்கையில் டிஜிட்டல்மயமாக்கல் செயற்பாடுகள் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக, இதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விரைவில் புதுப்பிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் ஓஷத சேனாநாயக்க குறிப்பிட்டார். இந்த பணிகளின்போதே நேற்று (12) அநேகமான அரச இணையத்தளங்கள் இயங்காமற்போனதாகவும் அவர் கூறினார்.

ஏனைய செய்திகள்