by Bella Dalima 06-08-2021 | 1:16 PM
Colombo (News 1st) மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
நாட்டில் இதுவரை 86,15,292 பேர் Sinopharm முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதில் இரண்டாவது தடுப்பூசியை 18,30,680 பேர் பெற்றுள்ளனர்.
Covishield-இன் முதலாவது தடுப்பூசியை 10,35,554 பேரும் இரண்டாவது தடுப்பூசியை 8,33,606 பேரும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, AstraZeneca 02 ஆவது தடுப்பூசியை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்கள் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
பம்பலப்பிட்டி பொலிஸ் விளையாட்டரங்கிற்கு அருகில் பொலிஸ் மேலதிக படைத்தலைமையகம் அமைந்துள்ளது.
இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வோர், முதலாவது தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான தடுப்பூசி அட்டையையும் அடையாள அட்டையையும் கொண்டு செல்ல வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.