Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக வரி, ஒரு கிலோவுக்கு 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உருளைக்கிழங்குச் செய்கையின் அறுவடை ஆரம்பமாகியுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதனூடாக பாரியளவிலான அறுவடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.