செரமிக் பொருட்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

செரமிக் பொருட்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

by Staff Writer 24-03-2021 | 4:07 PM
Colombo (News 1st) தற்காலிகமாக இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த செரமிக் பொருட்களை 180 நாட்கள் கடன் வசதி அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பத்திக் மற்றும் கைத்தறி ஆடைகளைத் தவிர, ஏனைய புடவைகளை 90 நாள் கடன் வசதி அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2021 பெப்ரவரி 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் 20 ஆவது சரத்தின் ஏற்பாடுகளை பாராளுமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.