மனோ கணேசனிடம் கொஹூவல பொலிஸார் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 16-02-2021 | 6:45 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் கொஹூவல பொலிஸார் இன்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டனர். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொஹூவலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது.