by Staff Writer 06-02-2021 | 2:42 PM
Colombo (News 1st) அரச இணையத்தளங்களை இலக்கு வைத்து .LK என பதிவு செய்யப்பட்டுள்ள சில இணையத்தளங்கள் (LK domains) முடக்கப்பட்டுள்ளதாக .LK இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்தார்.
முடக்கப்பட்டுள்ள இணையத்தளங்களில் பெரும்பாலான அரச இணையத்தளங்களின் IP முகவரிகள் வேறொரு தளத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக (malicious redirection) அவர் கூறினார்.
எனினும், இந்த நடவடிக்கை மூலம் எவ்விதத்திலும் தரவுத் திருட்டு இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் கிஹான் டயஸ் குறிப்பிட்டார்.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் கணினி அவசரப் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் கிஹான் டயஸ் தெரிவித்தார்.
இன்று காலை முதல் குறித்த இணையத்தளங்கள் முடக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படின் 011 4 21 60 61 என்ற இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு .LK இணையத்தள பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் கூறினார்.