வசூல் வேட்டை நடத்தும் மாஸ்டர்

வசூல் வேட்டை நடத்தும் மாஸ்டர்

by Bella Dalima 15-01-2021 | 4:13 PM
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மாஸ்டர் படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால், ரசிகர்களைக் கடந்து திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. பொதுவாகவே விஜய்யின் படங்கள் இந்திய அளவில் வசூலில் சாதனை படைக்கும். ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும். மாஸ்டர் படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானதால், 2 நாட்களில் உலகம் முழுவதும் 80 கோடி இந்திய ரூபாவைத் தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.