நாட்டில் இணையத்தள மோசடிகள் அதிகரிப்பு

நாட்டில் இணையத்தள மோசடிகள் அதிகரிப்பு; பொலிஸார் தகவல்

by Staff Writer 08-01-2021 | 4:02 PM
Colombo (News 1st) நைஜீரிய பிரஜைகளின் தலையீட்டுடன் நாட்டில் முன்னெடுக்கப்படும் இணையத்தள மோசடிகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இலங்கையிலுள்ளவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி, அதனூடாக இணையத்தள மோசடிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். மொரட்டுவை பகுதியில் வசிக்கும், கட்டட நிர்மாணத்தில் ஈடுபடும் ஒருவரால் மற்றுமொருவருக்கு 09 இலட்சம் ரூபா வழங்கப்படுவதாக மின்னஞ்சலூடக தெரிவித்து மோசடி இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் நுகேகொடை பகுதியில் வசிக்கும் நைஜீரிய பிரஜை ஒருவரும் மருதானை மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் வசிக்கும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையத்தள மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட இலத்திரணியல் சாதனங்கள் பலவும் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூன்று பேரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்