by Staff Writer 17-12-2020 | 6:41 AM
Colombo (News 1st) MCC எனப்படும் மிலேனியம் கோப்பரேஷன் உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
இதற்கமைய 5 வருட காலத்திற்காக இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இரத்து செய்யப்படவுள்ளது.
MCC பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்ததாக அமெரிக்காவின் வௌிநாட்டு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.