by Staff Writer 01-11-2020 | 9:52 AM
Colombo (News 1st) முல்லேரியா வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள PCR பரிசோதனை இயந்திரத்தை நாளை (02) மீண்டும் பரிசோதனை நடவடிக்கைக்கு பயன்படுத்த முடியும் என சீன தூதரம் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
10 மணித்தியாலங்களின் பின்னர் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான இயந்திரம் சாதாரண நிலையில் இருப்பதாகவும் ஆய்வுகூடத்தின் சுற்றுச்சூழலே இயந்திரம் செயலிழக்க காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இயந்திரத்தின் செயற்பாட்டை நூறு வீதம் உறுதிப்படுத்துவதற்காக தொடர்ந்தும் செயற்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
குறித்த PCR இயந்திரம் செயலிழந்ததை அடுத்து அதனை பழுதுபார்ப்பதற்கு வருமாறு இலங்கையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து சீன தொழில்நுட்ப குழு இலங்கைக்கு விஜயம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.