by Chandrasekaram Chandravadani 05-10-2020 | 4:24 PM
பிரபல நடிகை தமன்னாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிகிச்சைக்காக ஹைதராபாத்திலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டபோது, தமன்னாவிற்கு கொரோனாவிற்கான அடையாளங்கள் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.