குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா

குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணுக்கு மீண்டும் கொரோனா தொற்று

by Staff Writer 16-06-2020 | 11:21 AM
Colombo (News 1st) கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று அநுராதபுரம் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரம் - கெப்பத்திக்கொல்லாவ பகுதியில் வசிக்கும் குறித்த பெண், தேசிய தொற்றுநோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டுளளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணுடன் தொடர்புகளை பேணியவர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும விசேட வைத்திய நிபுணர் கூறினார். குவைத்திலிருந்து நாடு திரும்பிய 36 வயதான குறித்த பெண், கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்ததுடன் சிகிச்சைகளின் பின்னர் அவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது.