by Staff Writer 15-04-2020 | 3:10 PM
Colombo (News 1st) மரக்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ரயில்களில் கொண்டுசெல்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தூரப் பிரதேசங்களில் உள்ள விவசாயிகளின் உற்பத்திகளை ஏனைய பகுதிகளுக்கு கொண்டுசெல்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, உணவுப் பொருட்களை ரயில்களில் கொண்டுசெல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.