ஹார்வி வைன்ஸ்டீனுக்கு 23 வருட சிறைத்தண்டனை

பாலியல் குற்றச்சாட்டில் ஹொலிவுட் தயாரிப்பாளருக்கு 23 வருட சிறை

by Staff Writer 12-03-2020 | 12:12 PM
Colombo (News 1st) பிரபல ஹொலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரான ஹார்வி வைன்ஸ்டீனுக்கு (Harvey Weinstein) 23 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் கடந்த மாதம் இது குறித்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஹார்வி வைன்ஸ்டீன் குற்றம் இழைத்ததாக அறிவிக்கப்பட்டார். இதேநேரம், 67 வயதான ஹார்வி நீதிமன்றத்துக்கு சக்கர நாற்காலியிலேயே வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 5 வருட கால தண்டனை விதிக்கப்பட்டாலும் அது ஆயுள் தண்டனை போன்றதாகும் என ஹார்வி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதிட்டிருந்தனர். நடைபெற்ற சம்பங்களுக்காக தாம் மிகவும் வருந்துவதாக தெரிவித்த ஹார்வி, குறித்த சம்பவங்களால் தாம் குழப்பமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.