by Staff Writer 02-10-2019 | 12:52 PM
Colombo (News 1st) ஒருதொகை வல்லப்பட்டையை சட்டவிரோதமாக துபாய்க்கு கொண்டுசெல்ல முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவர், சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிஉல்ல - பன்னல பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞரே வல்லப்பட்டையுடன் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 6.25 மணியளவில் துபாய்க்கு செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தமது பயணப்பொதியில் பழங்களுடன், வல்லப்பட்டையை மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 22 கிலோ 950 கிராம் வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 12 50 300 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டை அரசுடமையாக்கப்பட்டதுடன், சந்தேகநபருக்கு 50 000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.