by Staff Writer 05-09-2019 | 1:13 PM
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (05) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலப்பகுதியில் 32 கோடி ரூபாவுக்கும் அதிக நிதியை ஈட்டி, நிதி தூய்தாக்கலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதிவாதி 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 50 இலட்சம் பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிப்பதற்கு கொழும்பு மேல் நிதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சஜின் டி வாஸ் குணவர்தனவுக்கு வௌிநாடு செல்லத் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, கடவுச்சீட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.