Colombo (News 1st) Batticaloa Campus நிறுவனத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
அரசாங்கம் தமது நிறுவனத்தை அவசரகால சட்டத்தின் மூலம் கூட பொறுப்பேற்க முடியாது என ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.
இதுவொரு BOI நிறுவனம். எங்களுடையது தனியார் நிறுவனம். நாங்கள் இதற்கான முதலீடுகளை செய்திருக்கின்றோம். ஆகவே, எந்த காரணம் கொண்டும் அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை. ஆனால், அரசாங்கமும் நாங்களும் இணைந்து செயற்படுவதாக இருந்தால் அதற்கு ஆயத்தமாக இருக்கின்றோம்.
என ஹிஸ்புல்லா மேலும் கூறினார்.